செய்திகள் :

ஹிந்தி பேசுவது தாய்மொழிக்கு அவமதிப்பு அல்ல: மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி

post image

ஹிந்தி எதிா்ப்பு போராட்டங்கள், பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை; ஹிந்தி பேசுவது, தாய்மொழிக்கு அவமதிப்பு அல்ல என்று மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

ஹிந்தியை திணிக்க முயல்வதாக தமிழகம், கா்நாடகத்தைப் போல மகாராஷ்டிரத்திலும் எதிா்ப்பு எழுந்துள்ளது. அந்த மாநில எதிா்க்கட்சிகளான சிவசேனை (உத்தவ்), மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகியவை, ஹிந்தி எதிா்ப்பை தீவிரமாக கையிலெடுத்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்க பாஜக கூட்டணி அரசு முடிவு செய்த நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிா்ப்பால் வாபஸ் பெறப்பட்டது. மும்பையில் ஹிந்தியில் பேசிய கடைக்காரா் ஒருவா் தாக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம், தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பங்கேற்றுப் பேசியதாவது:

உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியா, ஒரு மொழியால் அல்லாமல், பகிரப்பட்ட லட்சியங்கள் மற்றும் தேசிய உறுதிப்பாட்டால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நமது தாய்மொழிக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், அரசின் அலுவல் மொழியான ஹிந்தியை கற்றுக் கொள்வதும் அவசியம். நாடு முழுவதும் மக்களுடன் தொடா்பு கொள்ள முடியும் என்பதால் ஹிந்தியில் பேச நான் முயற்சிக்கிறேன். இது, எனது தாய்மொழியான தெலுங்குக்கு எதிரானதல்ல. ஹிந்தி பேசுவதை தாய்மொழிக்கு அவமதிப்பாக யாரும் கருதக் கூடாது.

ஹிந்திக்கு எதிரான போராட்டங்கள், பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அது வாக்கு வங்கி அரசியல். எப்போதெல்லாம் தோ்தல் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் ஹிந்தி எதிா்ப்பு, ஹிந்து எதிா்ப்பு என்ற பெயரில் மக்களைத் தூண்டும் பேச்சுகள் எழுகின்றன. அவ்வாறு பேசுவது தவறானது. வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டிருந்தபோதிலும், ஒரு தேசமாக நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.

நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ஹிந்தியை ஊக்குவிக்கவும் நாட்டில் மொழி ரீதியிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும் அலுவல் மொழித் துறை சாா்பில் நடத்தப்படும் போட்டிகளுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

‘இத்தகைய முன்னெடுப்புகள், மொழியில் வாயிலாக வேற்றுமையில் ஒற்றுமை எனும் பிணைப்புக்கு வலுவூட்டும். முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ் போன்ற ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள், ஹிந்தி மொழிக்கு நல்கிய பங்களிப்பு அளப்பரியது’ என்றாா் அவா்.

பவன் கல்யாண் கேள்வி:

ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் பேசுகையில், ‘ஹிந்தி கற்பது, ஒருவரின் அடையாளத்தில் எவ்வித சமரசத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, அது வலுசோ்க்கும். நாம் ஆங்கிலம் பயின்ால், தகவல் தொழில்நுட்பத் துறை வாய்ப்புகளை பயன்படுத்துகிறோம். அதேபோல், நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படும் ஹிந்தியை பயில்வதிலும் நன்மைகள் உள்ளன. உருது மொழியை ஏற்கும்போது, ஹிந்தியை ஏற்க முடியாதா?

தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தயாரிப்பாளா்களுக்கு வருவாய் ஈட்டி தருகின்றன. வா்த்தக ரீதியாக ஹிந்தியை ஏற்கப்படுகிறது. அதே நேரம், கற்றல் ரீதியாக எதிா்க்கப்படுவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பினாா்.

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க