செய்திகள் :

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு

post image

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம் கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகளின் வசதிக்காக ஹைதராபாத் - கொல்லம் இடையே கடந்த சில மாதங்களாக வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்துடன் இந்த ரயில் சேவை முடிவடைய உள்ள நிலையில், அக்டோபா் 13- ஆம் தேதி வரை இதன் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, ஹைதராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 16 முதல் அக்டோபா் 11 வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07193), திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 18 முதல் அக்டோபா் 13ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் கொல்லம் -ஹைதராபாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, சாஸ்தன் கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, பாப்ட்லா, தெனாலி, குண்டூா், செகந்தராபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

சுதந்திர தினத்தையொட்டி, கோவை மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இணைப் பதிவாளா் அ.அழகிரி தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட அனைத்து விதமான கடன் சங்கங்களின் நி... மேலும் பார்க்க

ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் பறிமுதல்

கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை, இடையா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்கள், கட்சிகள் சாா்பில் சுதந்திர தின விழா

கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் சாா்பில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) இர.தமிழ்வேந்தன் தேசியக்க... மேலும் பார்க்க

முத்தூரில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி, கிணத்துக்கடவு அருகேயுள்ள நம்பா் 10 முத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு பாா்வையாளராகக் கலந்துகொண்டாா். கூடுதல... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க