செய்திகள் :

10வது நாள் - 150 அடி ஆழத்தில் குழந்தை! தோண்டப்பட்ட சுரங்கமும் கைக்கூடாத சோகம்!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க கடந்த 10 நாள்களாக 160 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட சுரங்கம் திசை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிச.23 அன்று கோட்புட்லி - பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய நிலத்தின் 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள்  சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்தது.

பின்னர், அங்கு விரைந்த மீட்புப் படையினர் குழந்தையை மீட்க உள்ளூர் முறைகள் பலவற்றை முயற்சி செய்தனர். அவை அனைத்தும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததினால் குழந்தை விழுந்த ஆழ்துளைக்கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு குழித்தோண்டினர்.

குழித்தோண்டப்பட்டு அதனுள் பாதுகாப்பான வழியை அமைக்கும் பணி கடந்த டிச.28 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குழந்தை இருக்கும் திசைக்கு நேராக 8 அடிக்கு சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடுமையான பாறைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இடையிடையே இருக்கும் பாறைகளைத் துளைக்கும் பணி 160 அடி ஆழத்தில் மிகுந்த சிரமத்தோடு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதையும் படிக்க: கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

இந்நிலையில், தோண்டப்பட்ட அந்த சுரங்கம் குழந்தை சிக்கியிருக்கும் திசையில் இல்லாமல் வேறு திசையில் சென்றுள்ளதாகவும் அதனால் குழந்தை எங்கு சிக்கியுள்ளது என்பதைக் கணிக்க முடியவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் கல்பனா அகர்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தோண்டப்பட்ட அந்த சுரங்கம் தோல்வியில் முடிந்ததினால் மீட்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக, கடந்த டிச. 23 முதல் ஆழ்துளைக் கிணற்றில் உணவுத் தண்ணீர் இன்றி சிக்கியுள்ள குழந்தையின் உடலில்  கடந்த டிச. 24 முதல் எந்தவொரு அசைவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நாள் முதலே மீட்புப் படையினர் சரியான திட்டமில்லாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வருவதாக குழந்தையின் உறவினர்களும் அந்த கிராமவாசிகளும் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சூட்டில் இளைஞர் படுகாயம்! 2 பேர் கைது!

தெற்கு தில்லியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவரை சுட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு தில்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த நசீர் கான் (வயது 22) என்பவரது ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (ஜன.6) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தின் தாஹானு தாலுக்காவில் இன்று (ஜன.6) அதிகாலை 4.35 மணியளவில் 3.7 ரிக்டர் அள... மேலும் பார்க்க

ஜன. 11 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : அப்பாவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண... மேலும் பார்க்க

மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதம்!

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் மோசமான வானிலையினால் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இன்று (ஜன.6) கடூம் மூடுபனியினால் மோசமான வா... மேலும் பார்க்க

மணிப்பூரில் போதை மாத்திரைகளைக் கடத்திய 2 பேர் கைது!

மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்மாவட்டத்தின் மட்டா எனும் கிராமத்திலுள்ள கூகா பகுதியில் நேற்று (ஜன.5) பாதுகாப்புப் படையினர் சோதனை... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்... மேலும் பார்க்க