அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை: கேஜரிவால்
கடந்த 10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி செய்த சாதனைகளை சொல்ல பல மணி நேரம் ஆகும். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை என ஏராளமான வேலைகளை ஆம் ஆம்மி அரசு செய்துள்ளது. ஒழுங்காக வேலை செய்வோர் குறை சொல்ல மாட்டார்கள். குறை சொல்வோர் வேலை செய்ய மாட்டார்கள்.
ஏதாவது வேலை செய்திருந்தால் தில்லி மக்களை பிரதமர் குறை சொல்லியிருக்க மாட்டார். 10 ஆண்டுகளில், பாஜக தில்லியில் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை. 2022-க்குள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தனர், ஆனால் ஐந்து ஆண்டுகளில் 4,700 வீடுகளை மட்டுமே கட்டியுள்ளனர்.
5 நாள்களாக சிங்கங்களுக்கு மத்தியில் உயிர்வாழ்ந்த சிறுவன்!
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால், அவர்கள் தில்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் அழித்திருப்பார்கள். தில்லியில் பேரிடர் கிடையாது. உண்மையான பேரிடரே பாஜகதான். இவ்வாறு அவர் குறிபிட்டார். தலைநகர் தில்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன. 3) தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய மோடி, 'தில்லி பேரிடரில் உள்ளது. ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளில், ஏழை மக்களுக்கான நிதியில், பள்ளி குழந்தைகளுக்கான நிதியில் அவர்கள் ஊழல் செய்து வருகிறார்கள். ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து விடுவிக்க தில்லி மக்கள் முடிவு செய்துவிட்டனர்' என்றார்.