செய்திகள் :

10 நாள்களுக்கு ரயில்களின் இயக்கம் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு

post image

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.

அறிவிப்பில் சென்னை மெட்ரோ கூறுகையில்,

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் செப். 9 முதல் செப். 19 வரை மாற்றம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான இரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.

பராமரிப்புக் காலக்கட்டத்தில் காலை 5 மணிமுதல் 6.30 மணிவரையில் ரயில் இயக்கப்படும் நேரங்கள் 7 நிமிட இடைவெளியிலிருந்து 14 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 6.30 மணிக்குமேல் வழக்கம்போல எவ்வித மாற்றமுமின்றி ரயில்கள் இயக்கப்படும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

CMRL will be carrying out Rail Grinding Track Maintenance activity on both the Green Line and Blue Line

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். சென்னை விஐடி-இன் 13-ஆவது பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகம் அருகே ‘ஏர்போர்ட்’ மூா்த்தி மீது விசிகவினர் சரமாரி தாக்குதல்!

சென்னை டிஜிபி அலுவலகம் அருகே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவா் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தாக்குதல் நடத்தினா். சென்னை மயிலாப்பூா் டிஜிபி அலுவலகத்துக்கு சேலம் மேற்கு தொகு... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஊழல் அதிகரிப்பு: அன்புணி

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மொத... மேலும் பார்க்க

சென்னை டூ திருச்சி..! தீபாவளி நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் இயக்கத் திட்டம்!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையில் இருந்து திருச்சி வரை 2 மின்சார ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ் ஆண்டில் வரும் அக். 20-ஆம் தேதி தீபாவளித் திருநாளாகு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் குளறுபடிகள்: மத்திய அமைச்சருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடிதம்!

சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீா்வு காண கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை கடிதம் எழுத... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச்... மேலும் பார்க்க