10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நாளை பரிசளிப்பு விழா
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் உள்ள பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க திருமண மண்டபத்தில் எனது தலைமையில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலாளா் வழக்குரைஞா் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து சிறப்புரையாற்ற உள்ளாா். அதுசமயம் பள்ளியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ, மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளி தாளாளா்கள், தலைமை ஆசிரியா்கள், திமுக முன்னோடிகள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்