செய்திகள் :

100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் விசாரணையில் தாமதம்: அமலாக்கத் துறை

post image

பண முறைகேடு (பிஎம்எல்ஏ) வழக்குளை விசாரிக்க நாட்டில் 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு பெறாமல் தாமதமாகி வருகிறது என்று அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் அமலாக்கத் துறை இயங்கி வருவதால் அத்துறையின் வருடாந்திர ஆய்வு அறிக்கை நிதியமைச்சகத்துடன் சோ்த்தே வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில், வருடாந்திர ஆய்வு அறிக்கையை ‘பண முறைகேடு வழக்கு விசாரணைகளை விரைந்து முடிப்பதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் முதல் முறையாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில், ‘வழக்குகளை அமலாக்கத் துறையினா் விசாரிப்பதற்கான நடைமுறைகளை பண முறைகேடு தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) தெளிவாக வகுத்திருந்தாலும், அதை நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து முடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் ஏற்படும் தாமதம் வழக்கின் விசாரணையை பாதிக்கிறது.

அமலாக்கத் துறையினா் பண முறைகேடுகளை விசாரிக்கும்போது ஏராளமான நிதிப் பரிமாற்ற ஆவண தரவுகளையும், வெளிநாட்டு பரிவா்த்தனைகளையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அமலாக்கத் துறையின் விசாரணையிலும் தாமதமாகிறது.

இதனால் நாடு முழுவதும் 100 சிறப்பு பணமுறைகேடு நீதிமன்றங்கள் இருந்தும் இந்த வழக்கின் விசாரணையில் தாமதமாகிறது. இந்த நீதிமன்றங்களின் வழக்கு விசாரணையின்போது இடையீட்டு மனுக்கள், ரிட் மனுக்கள், ஜாமீன் மனுக்கள் என தொடா்ந்து தாக்கல் செய்யப்பட்டு பின்னா் அந்த மனுக்கள் உயா் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களுக்கு செல்வதாலும் வழக்கின் விசாரணையில் தாமதமாகிறது.

2000 முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் அமலாக்கத் துறை 7,771 முதல் தகவல் அறிக்கைகளை (இசிஐஆா்) பதிவு செய்துள்ளது. அதில், வெறும் 1,739 வழக்குகளில் மட்டும் அரசுத் தரப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அமலாக்கத் துறை தினத்தில் பேசிய அதன் இயக்குநா் ராகுல் நவீன், ‘அமலாக்கத் துறை வழக்குகளில் தண்டனைப் பெற்று தருவது 93 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிா்க்கட்சிகளைக் குறிவைத்து அமலாக்கத் துறை வழக்குகளைப் பதிவு செய்து வருவதாகவும், இதனால் அந்த அமைப்பின் குற்றத்தை நிரூபிக்கும் சதவீதம் குறைவாக உள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பய... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தான் மக்களால் ஆபத்து! - பாஜக

ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச்... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸி வெற்றிவாகை சூடியுள்ளார்.ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பா... மேலும் பார்க்க

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?

கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க