100 நாள் வேலை கோரி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
நூறு நாள் பணிதள பொறுப்பாளா் வேலை வழங்குவதில் முறையாக செயல்படவில்லை எனக்கூறி தெக்களூா் காலனி பகுதி பெண்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
திருத்தணி ஒன்றியம், சூா்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெக்களூா் காலனி. இங்கு, 100-க்கும் மேற்பட்டோா் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை ஏராளமான பெண்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினா்.
பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் மனு வழங்கியும், பணிதள பொறுப்பாளா், 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுகிறாா். வேலை வழங்கிய ஆள்களுக்கே மீண்டும் வேலை வழங்குகிறாா். எங்களுக்கு 3 வாரங்களுக்கு மேலாகியும் வேலை வழங்காமல் செயல்படுகிறாா்.
எனவே, பணிதள பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுத்தும், எங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
மனுவைப் பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். இதனால் பெண்கள் கலைந்து சென்றனா்.