100-வது போட்டியில் சாதனை மழை! மிரட்டும் மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தன்னுடைய 100-வது போட்டியில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது. 194 ரன்கள் இலக்கை நோக்கிய ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 27 ரன்களில் சுருண்டு மோசமானத் தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலிய அணித் தரப்பில் 7.3 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க், வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அதில், 4 மெய்டன்களும் அடங்கும்.
100 வது சர்வதேச போட்டியில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
400
இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதுவரை ஷேன் வார்னே, மெக்ராத் மற்றும் நாதன் லயன் ஆகியோர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
19064 பந்துகள்
19064 பந்துகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி, மிகக் குறைந்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் 16634 பந்துகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
2
முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர். முதலிடத்தில் இந்திய வீரர் இர்பான் பதான் 2006 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்த போட்டியில் முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
15 பந்துகள்
மிகக் குறைந்த(15 பந்துகள்) பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
எரின் டோஷாக் - 19 பந்துகள் (இந்தியாவுக்கு எதிராக)
ஸ்டூவர்ட் பிராட் - 19 பந்துகள் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)
ஸ்காட் போலண்ட் - 19 பந்துகள் (இங்கிலாந்துக்கு எதிராக)
4.3 ஓவர்கள்
மிகக் குறைந்த ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனை.
6 / 9
9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், 100-வது போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக, இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.