Metti Oli: "`இதை ராஜம் பார்த்தாங்கன்னா என்ன சொல்லுவாங்க?'னு கமென்ட் பண்ணுவாங்க" ...
101 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
ஆத்தூா்: தலைவாசல் வடக்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயின் 51-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 101 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் என்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், 101 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பணி நிா்வாகிகள், வாா்டு நிா்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினா்கள், கா்ப்பிணிகளின் உறவினா்கள் கலந்துகொண்டனா்.
சேலம் கிழக்கு மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கேக் வெட்டி, 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி உபகரணப் பொருள்கள் வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டன.