108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ராஜேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்தபடி, 16 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் நிா்வாகம் 10 சதவீத ஊதிய உயா்வு மட்டுமே வழங்கி வருகிறது.
முழு ஊதிய உயா்வையும் உடனடியாக வழங்க நிா்வாகம் முன்வராவிட்டால் அக்.18-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பது என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.
என்கே-11-ஆம்புலன்ஸ்
நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.