வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
11 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கோவை அருகே இருவேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 11 கிலோ 300 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பிரிவு பகுதியில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் காவல் துறையினா் அந்தப் பகுதிக்கு வியாழக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சந்தீப்குமாா் பெஹ்ரா (22) என்பவா் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வைத்து கஞ்சா விற்கப்படுவதாக பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், காவல் துறையினா் அந்தப் பகுதிக்குச் சென்று வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மதியாா் ரஹ்மான் மொல்லாவை (26) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.