ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக, செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் 12 புறநகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) ரத்து செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) காலை 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை நடைபெறவுள்ளது. இதனால், கடற்கரையிலிருந்து காலை 9.31, 9.51, 10.56, 11.40, நண்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 7.27 மணிக்கு திருமால்பூருக்கும் செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 11.30, பகல் 12, பிற்பகல் 1.10,1.45, 2.20 மணிக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும் கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படும்.
சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 9.31, 10.56, நண்பகல் 12.25 சிங்கபெருமாள்கோவிலுக்கும், காலை 9.51, காலை 11.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கபெருமாள்கோவிலிருந்து காலை 11.43, பிற்பகல் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து நண்பகல் 12.20, பிற்பகல் 2.05 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.