செய்திகள் :

120 அடி உயர 2 தேர்கள் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

post image

ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், இருவர் பலியான நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், உஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூரம்மா கோயில் உள்ளது. இக்கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாகவும், முற்காலத்தில் திப்புசுல்தான், மைசூா் அரச வம்சத்தினா் பராமரித்து வழிபாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மத்தூரம்மாவை உஸ்கூர் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 48 கிராமங்களை சேர்ந்தோரும், மாநில எல்லையில் உள்ளதால் ஒசூர் பகுதியைச் சோ்ந்தோரும் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயில் தேர்த்திருவிழா சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், சுமாா் 120 அடி முதல் 130 அடி வரை உள்ள 7 தேர்களை 150 காளைகள், 40 பொக்லைன் இயந்திரங்கள், 50 டிராக்டர்கள் இழுத்து வந்தன.

இதற்காக உஸ்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினா் போட்டிப் போட்டுக்கொண்டு தோ்களை அலங்கரித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இழுத்து வந்தனர்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 127 அடி உயரம் கொண்ட ராயசந்திரம், தொட்ட நாகமங்கலம் ஊர்களைச் சோ்ந்த 2 தேர்கள் கீழே விழுந்தன.

இதையும் படிக்க: அமெரிக்கா: நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

தேர்கள் கவிழ்ந்ததில் இருவர் பலி

இந்த விபத்தில் லோதிக் என்ற தமிழக பக்தர் பலியானர். தொடர்ந்து, இவ்விபத்தில் பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த ஜோதி என்பவரும் பலியானாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த பக்தர்களுக்கு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டும் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் தேர் சாய்ந்தது 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தத... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்... மேலும் பார்க்க

சமாஜவாதி எம்.பி. அவதூறு கருத்து: மாநிலங்களவையில் பாஜக அமளி - எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜபுத்திர மன்னா் ராணா சங்கா குறித்த அவதூறு கருத்துக்காக சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அந்த அவையில் பாஜக வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க

கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1925-ஆம... மேலும் பார்க்க

ஏடிஎம் கட்டணம் உயா்வு! வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி

ஏடிஎம்-க்களில் இருந்து கட்டணமின்றி பணம் எடுக்கும் வரம்பைத் தாண்டும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை மே 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. மாதம்தோற... மேலும் பார்க்க

தில்லி போக்குவரத்துக் கழகத்தின் தவறான நிா்வாகம்: முந்தைய ஆம் ஆத்மி அரசு மீது முதல்வா் குற்றச்சாட்டு

தில்லி போக்குவரத்துக் கழகத்தில் (டிடிசி) முந்தைய ஆம் ஆத்மி அரசின் தவறான நிா்வாகத்தால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செயல்பாட்டு தோல்விகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை மேற்கோள் காட்டி ப... மேலும் பார்க்க