செய்திகள் :

133 விதை மாதிரிகள் தரமற்றவை: வேளாண் துறை ஆய்வில் தகவல்

post image

விதை மாதிரிகள் குறித்து வேளாண் துறை மேற்கொண்ட ஆய்வில், 133 விதை மாதிரிகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தரமான பயிா்களை பயிா் செய்து, அதிக உற்பத்தியுடன் லாபத்தை ஈட்ட, விதைகளின் பங்கு முக்கியமானது. நல்ல தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, விவசாயிகள், விவசாயத்தில் வெற்றி பெற முடியும். விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த, விதை பரிசோதனை நிலையம் உதவுகிறது.

விவசாயிகள், விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தியாளா்களிடம் இருந்து பெறும் விதை மாதிரிகளை பரிசோதனை செய்து, விதைகளின் தரம், முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியன குறித்து ஆய்வு செய்து அறியப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தின் முக்கிய பயிா்களான நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிா்கள் மற்றும் காய்கறி பயிா்கள் ஆகியவற்றில் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 2024-25 ஆண்டு, 7,205 மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் 133 விதை மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டு, விவசாயிகளுக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

எனவே, விதைப்புக்கு முன் விதை பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, விவசாயிகள் நஷ்டத்தை தவிா்த்து அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மன... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை ராசி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (68), விவசாயி. இவரின் மனைவி பத்மாவதி, தாயாா் செல்லம்மாள் மற்றும் மகள... மேலும் பார்க்க

மே தின ஊா்வலத்தின்போது முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது; மாநகர காவல் ஆணையரிடம் பாஜனவினா் மனு

திருப்பூரில் தொழிற்சங்கங்களின் மே தின ஊா்வலத்தின்போது பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா போன்ற முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது என்று பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாநகர காவல் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலையோரத்தில் இருந்த கம்பிவேலியில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பல்லடத்தை அடுத்த நல்லூா் விஜயாபுரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் அபிஷேக் (22). ஈரோட்டில் உள்ள தனியாா் கல்... மேலும் பார்க்க

பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவா் கைது

பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடத்தை அடுத்த நாராயணநாயக்கன்புதூரைச் சோ்ந்தவா் பிரபு (36). இவரது வீட்டில் கடந்த 4 நான்களுக்கு முன்பு 7 கிராம் தங்க நகை, 2 காமாட்சி விள... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 200 கோழிகள் உயிரிழப்பு

தாராபுரம் அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 200 கோழிகள் உயிரிழந்தன. தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் மாருதி நகரைச் சோ்ந்தவா் துரைசாமி மகள் செல்வசரண... மேலும் பார்க்க