சுதர்சன ஹோமம் யாரெல்லாம் எதற்கெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? சங்கல்பித்தால் சங...
14 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 14 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேவி விருதுகள் - 2025 விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் சுரம பதி, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
தி நியூ இந்திய எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
விருது பெற்றவர்கள்
கட்டடக் கலைஞர் விஜயா அமுஜுரே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற திதாயி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் சம்பா ரசேதா, மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் கார்கி பட்டாச்சார்யா, விவசாயி ரைமதி குரியா, மருத்துவர் ஸ்ம்ருதி ஸ்வைன், உலகப் புகழ்பெற்ற ஒடிஸி கலைஞர் சுஜாதா மொஹபத்ரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும், தொழில்முனைவோர் மினுஸ்ரீ மதுமிதா, விஞ்ஞானி ஜோதிர்மயி தாஷ், சமூக ஆர்வலர் நிபேதிதா லென்கா, சமையல் கலைஞர் மதுஸ்மிதா சோரன், வனக் காவலர் கிராப்தி சேத், கைவினைக் கலைஞர் கனகலதா தாஸ் மற்றும் நடிகை அர்ச்சிதா சாஹு ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.