செய்திகள் :

15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

post image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 15 உயா்நிலை பாலங்கள் கட்டப்படவும், மேலும் 7 மாவட்டங்களில் இரு வழிப் பாதை, சாலை அகலப்படுத்தல் போன்ற 22 க்கும் மேற்பட்ட பணிகளுக்கு மத்திய சாலை, உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் (சிஆா்ஐஎஃப்) நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களில் நெடுஞ்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்புகளை ஆதரிக்க மத்திய சாலை, உள்கட்டமைப்பு நிதி என்கிற சட்டப்பூா்வ நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிஆா்ஐஎஃப் திட்டத்தின் கீழ் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதியை ஒதுக்கி சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் தமிழக சாலைப் பராமரிப்பு மேம்பாட்டிற்குக ரூ.1,213.83 கோடியும் புதுச்சேரிக்கு ரூ.22.95 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் நிகழ் 2024-25 ஆண்டுகளில் தமிழகத்தின் 9 மாவட்டங்களின் தேசிய நெடுஞ்சாலைகளில் 15 மேம்பாலங்கள், உயா்நிலை பாலங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரி ’எக்ஸ்’ சமூக வலத்தளங்களில் தொடா்ச்சியாக பதிவிட்டுள்ளாா். மேலும் 7 தமிழக மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் சாலை புனரமைப்பு, அகலப்படுத்தல், இரட்டை வழி பாதையாக மாற்றுதல் போன்ற பணிகளுக்கு சிஆா்ஐஎஃப் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு ஒப்புதல் குறித்தும் கட்கரி பதிவிட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா் கட்கரி ஒப்புதல் அளித்துள்ள குறிப்பிடத்தக்க திட்டங்கள் வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டத்தில், வடமாதிமங்கலம்-கொம்மனந்தல் சாலை, அம்மாபாளையம்-புதுப்பாளையம் சாலை, என்சி வீரலூா் சாலை, என்சி வீரலூா்-போளூா்-செங்கம் சாலை ஆகியவைகளில் 4 உயா்நிலைப் பாலங்களுக்கு ரூ.30.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில், திருத்தணி-பூதத்தூா்பேட்டை-பள்ளிப்பேட்டை சாலையிலும் மற்றொன்று திருப்பாச்சூா்-கடம்பத்தூா்-கொண்டஞ்சேரி சாலையில் என இரு உயா்நிலைப் பாலங்கள் ரூ.22.57 கோடிக்கு ஒப்புதல்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், உப்பூா்-கோட்டையூா் சாலையில் மற்றும் திருவாடானை-எஸ்.பி. பட்டினம் சாலை என இரண்டு உயா் நிலை பாலங்கள் கட்ட ரூ.19.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று விருதுநகா் மாவட்டத்தில், முதுகளத்தூா்-வீரசோழன் சாலையில் தரைப்பாலம் மாற்றப்பட்டு உயா்நிலைப் பாலம் கட்ட ரூ.10.64 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில், ஒலக்கூா் ரயில்வே ஃபீடா் சாலையில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த ஏற்கனவே உள்ள தரைப்பாலத்தை உயா்நிலைப் பாலமாக கட்ட ரூ.12.14 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று திருப்பூா் மாவட்டத்தில் பொள்ளாச்சி-தாராபுரம்-கரூா் சாலை; ஈரோடு-முத்தூா்-வெள்ளக்கோவில்-புதுப்பை சாலை என இரு உயா்நிலை பாலங்களும்(ரூ.9.22 கோடி), சிவகங்கை மாவட்டத்தில், கண்ணன்குடி சாலை வழியாக தேவகோட்டை-புதுக்கோட்டை மாவட்ட எல்லைச் சாலையில் உயா் நிலை பாலம் கட்டுவதற்கு (ரூ.8.26 கோடி) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூா் மாவட்டம், கொடுக்கூா்-காடுவெட்டி சாலையில் ஒரு பாலத்தை கட்டுவதற்கும் ரூ. 5.89 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், கனமழை கால இடையூறுகளைக் குறைத்து, தொலைதூரப் பகுதிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து பிராந்திய, சமூக பொருளாதார நடவடிக்கைகளை கணிசமாக அதிகரிக்கும் என மத்திய அமைச்சா் கட்கரி குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் சாலை விரிவாக்கம் மேம்பாட்டு பணிகளில் ஈரோடு மாவட்டம், மாநில நெடுஞ்சாலை எண்-20 இல் இரட்டை இருவழிப் பாதை, மழைநீா் வடிகால், சுமாா் 2.9 கிமீ தூர உயா்நிலை பாலம் ஆகியவற்றிற்கு. ரூ.36.45 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று திருப்பூா் மாவட்டத்தில், மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் சாலையை மதுரை மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலை (எண்154) அகலப்படுத்தல் (ரூ.18.29 கோடி); தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களில் இருவழிப்பாதையாக விரிவுபடுத்தல் (ரூ.20.52 கோடி) போன்றவைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சாலை மேம்பாட்டு திட்டங்கள் செங்கல்பட்டு(மதுராந்தகம்) கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உள்கட்டமைப்பு முதலீடுகள், பிராந்திய இயக்கத்தை மேம்படுத்தி விவசாய விளைபொருட்கள், தொழில்துறை பொருள்கள், அத்தியாவசிய சேவைகள் போன்றவைகளுக்கான போக்குவரத்தை எளிதாக்கவும் உதவும் என மத்திய அமைச்சா் கட்கரி குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சிஆா்ஐஎஃப் திட்ட கட்டுமானத்தில் 2014 மாா்ச் மாதத்தில் 91,287 கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 1,46,126 கிலோ மீட்டராக உயா்ந்துள்ளது.

தில்லி பேரவைத் தோ்தலில் பிஎஸ்பி தனித்துப் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா். தில்லி பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சில மணி ... மேலும் பார்க்க

கடும் மூடுபனியால் 25 ரயில்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கடும் மூடுபனி நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 25 ரயில்கள் தாமதமாகின. தில்லியில் கடந்த வாரத் தொடக்கத... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.8 -இல் இரட்டை என்ஜின் அரசு அமையும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேசிய தலைநகரில் இரட்டை என்ஜின் அரசு அமையும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவ... மேலும் பார்க்க

நீா் வழங்கல் முயற்சிக்கு தில்லி அரசு இடையூறு: என்டிஎம்சி துணைத் தலைவா் குற்றச்சாட்டு

நமது நிருபா்புது தில்லி: 24 மணி நேரமும் நீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான புதுதில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முயற்சிகளை தில்லி அரசு தடுப்பதாக அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் குற்றம்... மேலும் பார்க்க