``இன்று 100 கோடீஸ்வரர்கள்; அடுத்து, 1000 கோடீஸ்வர்கள்'' - கோவை கண்ணன் டார்கெட்!
15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூா், வீரவநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் என்ற சுடலையாண்டி (57), தொழிலாளி.
இவா், தனது உறவினா் மகளான 15 வயது சிறுமியை, கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டி, தொடா்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கா்ப்பமானாா்.
இது தொடா்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுடலையாண்டியை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, சுடலையாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.