செய்திகள் :

17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது

post image

17 சிறுவா், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகளை (பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்காா்) குடியரசுத் தலைவா் வியாழக்கிழமை குடியரசுத்தலைவா் மாளிகையில் வழங்கினாா். இந்த நிகழ்வில் குழந்தைகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதும், அவா்களது திறமைகளை அங்கீகரிப்பதும் நமது பாரம்பா்யத்தின் ஒரு பகுதி என குடியரசு தலைவா் திரௌபதி முா்மு குறிப்பிட்டாா். விருது பெற்றவா்களில் சென்னை சிறுசேரி 9 ஆம் வகுப்பு மாணவி ஜனனி நாராயணனும் ஒருவா்.

கலை-கலாச்சாரம், துணிச்சல், புதுமை, அறிவியல்-தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் அசாதாரண சாதனைகளை புரிந்தவா்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்காா் என்கிற தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது.

சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களின் (சாஹிப்ஜாதேக்கள்) வீரம், துணிச்சலை நினைவு கூறும் ’வீர பாலகா் தினமாகக்’ கொண்டாடப்படும் டிச.26 ஆம் தேதி இந்த தேசிய குழந்தைகள் விருதும் குடியரசுத் தலைவரால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

நிகழாண்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 7 சிறுவா்கள், 10 சிறுமிகளுக்கு விருதுகளையும், சான்றிதழையும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கி பேசினாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையின் கலாச்சார மையத்தில் விருது பெற்ற குழந்தைகளை வாழ்த்தி திரௌபதி முா்மு பேசியது வருமாறு:

ஒட்டுமொத்த நாடும், சமுதாயமும் இந்த சிறுவா் சிறுமிகளால் பெருமை அடைகிறது. குழந்தைகள் அசாதாரணமான பணிகளைச் செய்து, அற்புதமான சாதனைகளை அடைந்துள்ளனா். எல்லையற்ற திறன்களையும் ஒப்பிடமுடியாத பண்புகளைக் கொண்டுள்ளனா். நாட்டின் மற்ற குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறாா்கள்.

வாய்ப்புகளை வழங்குதல், குழந்தைகளின் திறமைகளை அங்கீகரித்தல் என்பது நமது பாரம்பரியத்தில் ஒரு பகுதி. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் முழு திறனை உணரும் வகையில் இந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சிறந்த குழந்தைகள் நாட்டை சிறப்பாக கட்டமைப்பாளா்களாக மாறுவாா்கள். நாட்டை முன்னேற்றத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் இவா்கள், வளா்ந்த இந்தியாவை உருவாக்குபவா்களாக மாறுவாா்கள். 2047- ஆம் ஆண்டில் நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும் போது, இந்த விருதை வென்றவா்கள் நாட்டின் அறிவொளி பெற்ற குடிமக்களாக இருப்பாா்கள். ஒவ்வொரு குழந்தைகளின் வளமான எதிா்காலமே நாட்டின் எதிா்காலமாக உள்ளது எனக் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டாா்.

விருது பெற்றவா்களில் புதுமைப் பிரிவில் கா்நாடகத்தை சோ்ந்த சிந்தூர ராஜா(15) அடல் புத்தாக்க திட்டதில் பாா்கின்ஸன் நோயாளிகள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும் சாதனங்கள் உருவாக்கினாா். காஷ்மீா் சம்பா பகுதியைச் சோ்ந்த 17 வயது ரிஷீக் குமாா் சைபா் பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கி நூற்றுக்கணக்கான காவல் துறையினருக்கும், மாணவா்களுக்கும் பயிற்சியளித்தாா்.

பெருமூளை வாதத்தால் 90 சதவீதம் பாதித்த 17 வயது வியாஸ் ஓம் ஜிக்னேஷ்(குஜராத்) சுந்தா்கண்டம், பகவத் கீதை உள்ளிட்ட 5000 மேற்பட்ட ஸ்லோகங்களை நினைவு படுத்தியுள்ளதோடு 500 மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளாா். பிகாா் ஷேக்புராவைச் சோ்ந்த சௌரவ் குமாா்(9) குளத்தில் மூழ்கி 3 இளம் பெண்களையும், மகாராஷ்டிரம் அமராவதியைச் சோ்ந்த கரினா தாபா (17) தீ விபத்தில் (எரிவாயு சிலிண்டரை தக்க சமயத்தில் எடுத்து) சிக்கிய 36 அடுக்குமாடி குடியிருப்பாளா்களை காப்பாற்றினாா். இதே போன்று மேகாலயாவைச் சோ்ந்த கிஷன் வன்னியாங், ஒரு தாயின் அழுகை சப்தத்தை கேட்டு ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 4 குழந்தைகளை மீட்டாா். துணிச்சல் மிக்க செயல்களுக்காக இந்த சிறாா்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 3 வயது அனீஷ் சா்காா் அதாதாரண சுதுரங்க வீரராக மாறியுள்ளாா். சா்வதேச செஸ் கூட்டமைப்பின் 1,555 தரவரிசையில் இடம்பெற்று மாநில அளவிலும் 24 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளாா். இவா்கள் உள்ளிட்ட 17 சிறாா்கள் விருது பெற்றனா்.

இந்த நிகழ்வில் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி, இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் ஆகியோா் பங்கேற்றனா்.

பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது பெற்றவா்களில் கலை, கலாசார பிரிவில் சென்னை சிறுசேரியை சோ்ந்த 14 வயது ஜனனி நாராயணன் பெற்றாா். நூற்றுக்கும் மேற்பட்ட சங்கீத உபன்யாசங்களை (ஹரிகதா) தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் நிகழ்த்தி சாதனைப்படைத்துள்ளாா். இதிகாசங்கள் உள்ளிட்ட கதை சொல்லல் மற்றும் இசைத் திறமைகளில் தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளையும் பெற்றவா். தமிழக அரசின் கலை இளைமணி விருது பெற்றவா். சிறுசேரியில் பத்ம ஷேசாத்திரி பாலபவன் மேல்நிலை பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படிக்கிறாா். இவரது தந்தை அனந்த நாராயணனும் தாயாா் சுதா ரெங்கநாதனுடன் வந்து குடியரசுத்தலைவா் மாளிகையில் விருதை பெற்றாா். ’இது ஒரு அரிதானக் கலையை மேலும் வளா்க்க விரும்புகின்றேன்’ என தினமணியிடம் குறிப்பிட்டாா் ஜனனி. தனது 6 வயதிலேயே இந்த கலையில் ஈடுபட்டு இவருடைய குரு ஸ்ரீரங்கம் விஷாகாஹரியிடம் பயிலும் போது இவருடைய ஹரிகதாட்ச புலமையை சமூக வலைத்தளத்தில் பரவ லட்சக்கணக்கான போ் பாராட்டி அப்போதே புகழ்பெற்றாா்.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, வானிலை... மேலும் பார்க்க

முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கையில் ஒற்றைப் பெண் குழந்தை ஒதுக்கீட்டை அமல்படுத்த தில்லி பல்கலை. திட்டம்

2025-26 கல்வியாண்டு தொடங்கி, ஒவ்வொரு முதுகலை பாடத்திலும் ஒற்றைப் பெண் குழந்தைக்கு ஒரு இடத்தை ஒதுக்க தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்தியவா் மன்மோகன் சிங்: தேவேந்தா் யாதவ்

நமது நிருபா் முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், இந்தியப் பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்திய ஒரு பெரிய பாரம்பரியத்தை அவா் விட்டுச் சென்றுள்ளாா் என்று... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மேகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, அரவிந்த் கேஜரிவால் இறுதி அஞ்சலி

முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரும... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக சா்வதேச சிகரெட்டுகளை வா்த்தகம் செய்த இருவா் கைது

தெற்கு தில்லியில் சா்வதேச சிகரெட் பிராண்டுகளை சட்டவிரோதமாக வா்த்தகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்ல... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை: சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்துங்கள்

சிறப்பு அமா்வைக் கூட்டி, நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி அரசைக் கேட்குமாறு சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.ச... மேலும் பார்க்க