1988-ல் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் - தற்போதைய மதிப்பு இத்தனை லட்சமா?
சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லான் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது 1988ல் வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் குறித்த ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளார்.
கார் ஆர்வலரான இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ``இது குறித்து யாரேனும் அனுபவம் உள்ளவர்கள் கூற முடியுமா? இதனை எனது வீட்டில் கண்டுபிடித்தோம், விளக்கமாக கூறுங்கள்" எனப் பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
பல பங்கு சந்தை நிபுணர்கள் தங்களின் கருத்துக்களை அந்தப் பதிவில் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில இணையவாசிகள் அவருக்கு கொள்ளை லாபம் என்று பதிவில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
We found these at home, but I have no idea about the stock market. Can someone with expertise guide us on whether we still own these shares?@reliancegrouppic.twitter.com/KO8EKpbjD3
— Rattan Dhillon (@ShivrattanDhil1) March 11, 2025
அதேசமயம் சரியான பங்கு சந்தை நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். 1988ல் 10 ரூபாய்க்கு வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், தற்போது சுமார் 11 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒருவரது பங்கின் தற்போதைய விலைத்தொகையை நாம் பெற முடியுமா?
பங்கிற்கான கணக்கு வைத்திருப்பவர் தனக்கான நாமினியை நியமித்தால் அசல் பங்குதாரர் இறந்த பிறகு அவரது இறப்புச் சான்றை பதிவு செய்து நாமினி அதற்கான பணத்தை பெறலாம். அல்லது அவர்களின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், பங்குகள் நாமினியின் டெபாசிட்டரி பங்கேற்பாளர் கணக்கிற்கு மாற்றப்படும்.
ஒருவேளை ஷேர் வாங்கியவர் அதாவது பங்கு வாங்கியவர் எந்த நாமினியும் நியமிக்கவில்லை என்றால், பங்குகளை சுமுகமாக மாற்றுவதற்கு சிறந்த பங்கு சந்தை நிபுணர்களின் ஆலோசனை கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.