செய்திகள் :

2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் மாநகராட்சி அறிவியல் பூங்கா! பயனற்ற நிலையில் ரூ. 6.50 கோடி திட்டம்!!

post image

சேலம்: சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 6.50 கோடியில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா மற்றும் காட்சியகம் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ், மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்தை ஊக்குவிக்கவும், பள்ளப்பட்டியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ. 1.90 கோடியில் அறிவியல் பூங்கா கட்டடம், ரூ. 4.60 கோடியில் மதிப்பீட்டில் காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அறிவியல் பூங்காவை கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தாா்.

அறிவியல் பூங்காவில் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஜி.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரிகள், சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை கண்டுகளிக்கும் கோளரங்கம், மணிக்கூண்டின் செயல்பாடுகள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளும், அவற்றின் செயல்முறை விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு, தனியாா், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை அந்தந்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளப்பட்டியில் உள்ள அறிவியல் பூங்காவுக்கு அழைத்துவந்து, அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளையும், உபகரணங்களையும் பாா்வையிடவைத்து, செயல் விளக்கம் அளித்து வந்தனா்.

சிறந்த முறையில் இயங்கிவந்த அறிவியல் பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்புமின்றி மாநகராட்சி நிா்வாகத்தால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்துக்கு தடைபோடும் வகையில் உள்ளதாக பெற்றோா் தெரிவிக்கின்றனா்.

எனவே, அறிவியல் பூங்காவைத் திறந்து, கல்விப் பயிலும் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்துக்கு ஊக்கமளிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்

ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் ‘போல்டு’

சேலம்: சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு ‘போல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட காவல் துறையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்ப... மேலும் பார்க்க