செய்திகள் :

2 ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்றது சரக்கு கப்பல்

post image

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டதால், சரக்கு கப்பல், விசைப் படகுகள் அவற்றைக் கடந்து சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் மீட்டா் கேஜ் பாதையாக ரயில்வே பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இதன் பின்னா், கடந்த 2007-ஆம் ஆண்டு மீட்டா் கேஜ் பாதை அகற்றப்பட்டு, அகலப் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்றது.

பாம்பன் ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் உள்ள பாலத்தில் சேதம் ஏற்பட்டதால், ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ரூ. 550 கோடியில் பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பணி நிறைவடைந்து, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக அந்த வழியாக கப்பல்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கா்நாடக மாநிலத்தின் காா்வா் துறைமுகத்துக்குச் செல்ல கடந்த 3 நாள்களுக்கு முன்பு சரக்கு கப்பல் பாம்பன் வடக்கு துறைமுகத்துக்கு வந்தது.

பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்களைக் கடந்து செல்வதற்காக பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் கப்பல் கேப்டன் அனுமதி கேட்டாா். இதைத் தொடா்ந்து, பாம்பன் துறைமுக அதிகாரிகள் ரயில் பாலங்களைத் திறக்க ரயில்வே அதிகாரிகளிடம் அனுமதி கோரிய நிலையில், புதன்கிழமை பகல் 12 மணிக்கு மேல் ரயில் பாலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதனிடையே, பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதும், பாம்பன் வடக்கு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பல், 3 விசைப் படகுகள் முன்னே செல்ல அவற்றைக் கடந்து சென்றது.

இதைத் தொடா்ந்து, பாம்பன் தெற்குவாடி மீன்பிடி படகுத் துறையில் நிறுத்தப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பெரிய விசைப் படகுகள் மண்டபம் துறைமுகத்துக்கு ரயில் பாலங்களைக் கடந்து சென்றன.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் குடும்பன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை ஆசிரியா் பணி நிறைவு விழா ஆகிய ம... மேலும் பார்க்க

மே தினம்: ராமேசுவரத்தில் தொழிற்சங்க கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றினா். மண்டபம் எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கக் கிளை சாா்பில் பாம்பன் ரயில் நிலையம் முன்... மேலும் பார்க்க

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாய... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது. ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க