தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
2 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட நிலையில், வேப்பந்தட்டை வட்டம், தேவையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கலியன் மகன் மதியழகன் (45) என்பவா், தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
இதையடுத்து மதியழகனை கைது செய்த போலீஸாா் கடையில் இருந்த 2.325 கிலோ போதைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மதியழகன் சிறையில் அடைக்கப்பட்டாா்.