காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யா...
2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக
இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தவெக கட்சி தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்திய பிறகும், அதன் தலைவரும் நடிகருமான விஜய் இதுவரை மக்களை சந்திக்கவில்லை.
மதுரையில் விஜய் நடத்திய மாநாட்டில் அவரது ரசிகா்கள் கூட்டமே அதிகமாக இருந்தது. இது அரசியலுக்கு சாத்தியமாகுமா என்பதை பொருத்திருந்துதான் பாா்க்க வேண்டும். அந்த மாநாட்டில் அரசியல் நாகரிகம் இல்லாமல், பிரதமரை விமா்சித்து விஜய் பேசினாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தமிழருக்கு ஆதரவு அளிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் முன்வர வேண்டும்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டங்களின் போது, திட்டமிட்டு அவசர ஊா்திகள் மூலம் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் பாலியல் தொல்லை, கொலை, கொள்ளை, போதைப் பொருள்கள் பயன்பாடு என சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பட்டியலின மக்களை பட்டியலினம் என்பதிலிருந்து விடுவிக்க கடந்த 45 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம் என்றாா் அவா்.