2.94 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு!
முத்துப்பேட்டை வட்டம், இடும்பவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீசற்குண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான விளங்காடு கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து வெள்ளிக்கிழமை கோயில் செயலா் அசோக்குமாா் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு அந்த இடத்தில் கோயில் நிலம் யாரும் பயன்படுத்தக் கூடாது என பதாகை வைத்தனா்.