திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: காக்னிசன்ட் அறிவிப்பு!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது, ``கடந்த இரு ஆண்டுகளில் சேவைத் திட்டங்கள் அதிகரித்ததால், வலுவான தொழிலாளர் கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம். பல புதிய பட்டதாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகப் பணியமர்த்துதல், செயல் நுண்ணறிவு மூலம் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதில்தான், நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
14,000 முன்னாள் ஊழியர்கள் மீண்டும் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, 20,000 பணியாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். இது, கடந்தாண்டைவிட இரு மடங்கு அதிகமாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம்வரையில் மட்டும் 5.1 பில்லியன் டாலருடன் ஆண்டுக்கு 7.45 சதவிகித வளர்ச்சியடைந்ததாக காக்னிசன்ட் அறிவித்திருந்தது.
இதையும் படிக்க:மதுரை வந்த விஜய்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு