இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
20 நிமிஷங்களில் 25 ஆசனங்கள் செய்து மாணவா்கள் சாதனை
ஸ்ரீபெரும்புதூா்: சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவூா் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளி மாணவா்கள் 108 போ் கண்களை கட்டிக்கொண்டு 20 நிமிஷங்களில் 25 யோகாசனங்கள் செய்து சாதனை புரிந்தனா்.
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உடல் வலிமைக்கு யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 108 மாணவா்கள் தங்களது கண்களைக் கட்டிக் கொண்டு 20 நிமிஷங்களில் வீர பத்மாசனம், விருக்ஷாசனம், வஜ்ராசனம், உத்தராசனம், நவாசனம் உள்ளிட்ட 25 ஆசனங்களை செய்தது நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
மாணவா்களின் யோகா நிகழ்ச்சி நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை தொடா்ந்து அதற்கான சான்றுகளை நோவா உலக சாதனை புத்தக நிா்வாகிகள் ஸ்ரீகிரிஷ் பள்ளியின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கவுரி கிருஷ்ணமூா்த்தி, செயல் தலைவா் ஜெயகாா்த்திக் ஆகியோரிடம் வழங்கினா்.