செய்திகள் :

2016ல் வெளியான அதிர்ச்சித் தகவல்.. 75 வயது மூதாட்டி வயிற்றில் கல்லாய் மாறிய 30 ஆண்டு சிசு!

post image

அல்ஜீரியாவைச் சேர்ந்த 75 வயது பெண்ணின் வயிற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன சிசு கால்சியக் கல்லாய் மாறியிருந்தது மருத்துவப் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அந்த சிடி ஸ்கேன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. பலரும் இது தொடர்பாக ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது உண்மையா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

வயிற்று வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான், அவரது வயிற்றில், சிசு ஒன்று கல்லாய் மாறியிருந்ததைக் கண்டறிந்தனர்.

இந்த சிசு 7 மாதம் வரை உயிருடன் இருந்து அதன்பிறகு இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அப்போதுதான், அவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு, கருப்பைக்கு வெளியே கர்ப்பத் தரித்து, அதற்கு ரத்த ஓட்டம் கிடைக்காததால் சிசு வளராமல் இறந்துவிட்டதும், அது உடலிலிருந்து வெளியேற வழியில்லாமல், உடல் தனது பாதுகாப்புத் தொற்று சக்திகளைப் பயன்படுத்தி சிசுவை கால்சியமாக மாற்றி கல் போல ஆக்கிவிட்டது தெரிய வந்தது.

இந்த நிலைக்கு லிதோபீடியான் என்று பெயர். இந்த சிக்கல் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் வலியோ வேறு எந்த பிரச்னைகளோ இருக்காது என்றும், சில காலத்துக்குப் பின்தான் வயிற்று வலி போன்றவை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு கொலம்பியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வயிற்றில் 40 ஆண்டு கல் குழந்தை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உலகம் முழுவதும் இதுபோன்ற கடந்த 1996ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி 290 லீதோபீடியன் வழக்குகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், கண்டறியப்படாமல் சில இருந்திருக்கலாம் என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது.

இந்த கல் குழந்தைகள், நமது உடலில் இருக்கும் இயற்கையான தற்காப்பு முறையை பறைசாற்றும் சான்று என்றும், இறந்த குழந்தையால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படாமல், நோய் தற்காப்பு முறைதான் அதனை கல்லாக்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இஸ்ரேலின் 'டாடி' யார்? ஈரான் கிண்டல்!

ஈரானுடனான போரில் அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஓடியதாக ஈரான் அமைச்சர் விமர்சித்துள்ளார்.ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியை நன்றியற்றவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த நிலையில், டிரம்ப்பின... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு! சாலைகளில் திரண்ட மக்கள்!

இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள் மற்றும் அந்நாட்டின் விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 28) நடைபெறுவதால், லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ளனர். "ஆ... மேலும் பார்க்க

நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!

சீனாவில் வானில் பறந்து கொண்டிருந்த உள்நாட்டு விமானம் ஒன்று நடுவழியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சீனாவின், ஷாண்டாங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உள்நாட்டு வி... மேலும் பார்க்க

நன்றியற்ற ஈரான் தலைவர்! டிரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்காவை விமர்சித்த ஈரான் தலைமை மதகுருவை டொனால்ட் டிரம்ப் நன்றியற்றவர் என்று விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் நெற்றிப் பொட்டில் ஈரான் அறைந்ததாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பேசியதற்கு, அமெர... மேலும் பார்க்க

சீனா: கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு!

சீன நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி லீ ஹான்ஜான், மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் -ஈரான்

ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி த... மேலும் பார்க்க