பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
21 கல்லூரி மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 21 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.02 லட்சம் மதிப்பிலான கல்வி கட்டணத்தை புதன்கிழமை வழங்கினாா்.
கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளா்ச்சி போன்ற பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து தீா்வு காணப்பட்டு வருகின்றன. இதற்கான தொகையை பெரு நிறுவனங்கள் ஆட்சியரிடம் வழங்கியுள்ளன.
அந்த வகையில், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரி, ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மோகனூா் அரசு பாலிடெக்னிக், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக், பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் பல்வேறு பிரிவுகளில் பயிலும் 3 மாற்றுத் திறனாளிகள் உள்பட 21 மாணவ, மாணவிகளுக்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1,01,637 கல்விக் கட்டணத்துக்கான தொகையை காசோலைகளாக வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் மாதவியாதவ், திருச்செங்கோடு சாா்ஆட்சியா் அங்கீத்குமாா் ஜெயின், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.