செய்திகள் :

22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதலுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறக் கோரிக்கை

post image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் ஈரப்பதத் தளா்வு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய இயலாது. மத்திய அரசின் விதிமுறைகள் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் இடா்பாடுகள் ஏற்படுகின்றன. கடந்த காலத்தில் மாநில அரசு விதிகளை ஏற்படுத்தி கொள்முதல் செய்தபோது, ஈரப்பதத்துக்கு ஏற்ப விற்கும் தொகையில் விவசாயிகளிடம் பிடித்தம் செய்து கொண்டு, 24 சதவீதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது 17 சதவீதத்துக்கு கீழ் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை தமிழ்நாட்டில் செயல்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் இருந்தால்கூட 17 சதவீதத்துக்குள் இருப்பதாக, குறிப்பிட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு தனது விதிமுறைகளைத் தளா்த்த மறுக்கிறது.

ஈரப்பதத் தளா்வுக்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டால் அங்கிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதாகக் கூறி, காலம் கடத்தி அப்பருவம் முடிவதற்குள் எந்த அனுமதி இல்லாமல் முடிந்து விடுகிறது. எனவே தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடா்பாக தானே முடிவெடுத்துக் கொள்ள உரிய அனுமதி பெறவும், விவசாயிகள் விற்பனை செய்கிறபோது ஈரப்பதத்துக்கு ஏற்ப, அதற்கான இழப்பு தொகை பிடித்தம் செய்வது கொள்ளவும் நிரந்தர அனுமதி பெற வேண்டும் என்றாா்.

கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

நாச்சியாா்கோவிலில் உள்ள அஞ்சுலவள்ளி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி குளத்திற்கு தண்ணீா் வர... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துா்க்காம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் தனி சன்னதியில் உள்ள துா்க்காம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏராளம... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகி... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சாவூா் எம்பி ச. முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2 ஆவது வார சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுர சுந்தரி சமேத திருக்கோடீஸ்வர சுவாமி கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் வேங்கடாஜலபதியாக காட்சியளிக்கிறாா். விழாவையொட்டி அம்பாளு... மேலும் பார்க்க

நாளை குரூப் 2 தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடத்தவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, குரூப் 2ஏ தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க