வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: ஆதார் உள்ளிட்டவற்றை சேர்க்க உச்ச நீதிமன்றம...
25,500 புள்ளிகளுக்குக் கீழே சென்ற நிஃப்டி; சென்செக்ஸ் 83,536 புள்ளிகளுடன் நிறைவு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் ஏழு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை அறிவிப்பதை முன்னிட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால் நிஃப்டி 25,500 புள்ளிகளுக்குக் கீழே சென்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 176.43 புள்ளிகள் சரிந்து 83,536.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.40 புள்ளிகள் சரிந்து 25,476.10 புள்ளிகளாக நிலைபெற்றது. பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு சீராக முடிவடைந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு 0.5 சதவிகிதம் அதிகரித்தது.
சென்செக்ஸில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்த நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
நிஃப்டி-யில் டாடா ஸ்டீல், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், டெக் மஹிந்திரா ஆகியவை சரிந்த அதே நிலையில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்.யு.எல், அல்ட்ராடெக் சிமென்ட், கோல் இந்தியா ஆகியவை உயரந்து முடிவடைந்தன.
துறை ரீதியாக உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் தலா 1.4 சதவிகிதம் சரிந்தன. ஊடகம், ஐடி, பொதுத்துறை வங்கி தலா 0.5 சதவிகிதம் சரிந்தன. அதே நேரத்தில் எஃப்எம்சிஜி, ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள் 0.3 முதல் 0.8 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.
அனைத்து மருந்து இறக்குமதிகளுக்கும் 200 சதவிகிதம் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியபோதும் நிஃப்டி பார்மா குறியீடு சீரராக முடிந்தது.
பங்கு சார்ந்த நடவடிக்கையில் இன்று பீனிக்ஸ் மில்ஸ் பங்குகள் 3% சரிந்த நிலையில் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகளும் 3.6% சரிந்தன. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் 3.6% சரிவுடனும், கோத்ரெஜ் பிராபர்டீஸ் பங்குகள் 2.4% சரிவுடனும், சினெர்ஜி கிரீன் பங்குகள் கிட்டத்தட்ட 5% உயர்வுடன் முடிந்தன. திறன் அதிகரிப்பின் அடிப்படையில் பஜெல் ப்ராஜெக்ட்ஸ் பங்கின் விலை 5% உயர்வுடன் முடிந்தன.
குளோபல் ஹெல்த், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், எம்ஆர்எஃப், லாரஸ் லேப்ஸ், கிருஷ்ணா இன்ஸ்ட், நவின் ஃப்ளூரின், ராம்கோ சிமென்ட்ஸ் உள்ளிட்ட 120 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டன.
இதையும் படிக்க: 2% சரிவைக் கண்ட வீடுகள் விற்பனை
Benchmark indices ended on a negative note after Nifty slips below 25,500 as investors stayed cautious ahead of US President Trump announcement of trade deals with seven more countries.