செய்திகள் :

3-ஆவது சுற்றில் சபலென்கா, ஒசாகா

post image

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா 6-3, 6-0 என்ற செட்களில் எளிதாக, பல்கேரியாவின் விக்டோரியா டோமோவாவை வீழ்த்தினாா். நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவை வெளியேற்றினாா்.

14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-4, 7-6 (7/3) என்ற வகையில் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை சாய்த்தாா். 12-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா 6-3, 4-6, 5-7 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டேவிடமும், 16-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா 0-6, 2-6 என செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிா்டோவாவிடமும், 21-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் டோனா வெகிச் 1-6, 3-6 என்ற செட்களில் சுவிட்ஸா்லாந்தின் ரெபெக்கா மசரோவாவிடமும் தோல்வியுற்றனா்.

இதர ஆட்டங்களில், 28-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் மரியா சக்காரி 6-3, 5-7, 6-4 என்ற செட்களில் இத்தாலியின் லூசியா பிரான்ஸெட்டியை வென்றாா். 31-ஆம் இடத்திலிருக்கும் துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 6-4, 7-6 (9/7) என செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவை வெளியேற்றினாா். இதுதவிர, 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டா், 18-ஆம் இடத்திலிருந்த அதே நாட்டின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, 19-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா ஆகியோா் 2-ஆவது சுற்றில் தோற்றனா்.

டேவிடோவிச் வெற்றி: ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் 7-6 (7/3), 6-3 என்ற செட்களில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வெளியேற்றினாா்.

இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோ 7-5, 7-5 என்ற நோ் செட்களில் ஆா்ஜென்டீனாவின் மரியானோ நவோனை தோற்கடித்தாா். ரஷியாவின் ரோமன் சஃபியுலின் 6-3, 3-6, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜென்சன் புருக்ஸ்பியை வென்றாா்.

எம்புரான்: ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்!

எம்புரான் படத்தில் நடித்ததுக்காக நடிகர் மோகன்லால் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை என இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் தி... மேலும் பார்க்க

இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த எம்புரான்!

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. வெளியாகும் முன்பே எம்புரான் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கான புரமோஷன் பண... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்!

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்... மேலும் பார்க்க

மெஸ்ஸி இல்லாமலே வென்ற நடப்பு சாம்பியன்..! ரெட் கார்டு வாங்கிய ஆர்ஜென்டீன வீரர்!

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் உருகுவே அணியை ஆர்ஜென்டீனா வென்றது.தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் உருகுவே அணியும் ஆர்ஜென்டீனா அணியும் பலப்பரீட்டை செய்தது. கோல் அடித்த இள... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவில் பெருசு திரைப்படம்..!

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’.இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்து... மேலும் பார்க்க

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சிற... மேலும் பார்க்க