செய்திகள் :

3 கடற்படை போா்க்கப்பல்கள்: பிரதமா் நாளை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்!

post image

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் சூரத்’, ‘ஐஎன்எஸ் நீலகிரி’, ‘ஐஎன்எஸ் வாக்ஷீா்’ ஆகிய மூன்று முன்னணி போா்க்கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் முற்றத்திலிருந்து பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜன. 15) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

பிரதமரின் மகாராஷ்டிர பயணத்தின்போது, நவி மும்பையில் உள்ள காா்கரில் புதிய இஸ்கான் கோயிலையும் அவா் திறந்து வைப்பாா் என்று அவரது அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சாா் பாதுகாப்பில் உலகளாவிய முன்னணி நிலையை அடைவதற்கான இந்தியாவின் லட்சியத்தை நனவாக்குவதில் இந்த மூன்று முக்கிய கடற்படை போா்க்கப்பல்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

‘பி15பி’ ஏவுகணை அழிப்பு போா்க்கப்பல் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதிக் கப்பலான ஐஎன்எஸ் சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அழிக்கும் திறன்கொண்ட போா்க்கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பல் 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

‘பி17ஏ’ போா்க்கப்பல் திட்டத்தின் முதல் கப்பலான ஐஎன்எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போா்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது.

‘பி75’ ஸ்காா்பீன் திட்டத்தின் ஆறாவதும் இறுதியுமான நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீா், பிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து கட்டப்பட்டது. இது நீா்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளா்ந்து வரும் நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை உயா்த்துவதற்கான தனது உறுதிப்பாட்டுக்கு இணங்க நவி மும்பையில் இஸ்கான் கட்டியுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோயிலையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.

9 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்கோயிலில், ஒரு வேதக் கல்வி மையம், அருங்காட்சியகங்கள், நிகழ்ச்சி அரங்கு, சிகிச்சை நல மையம் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை புரிந்துகொள்ள ஆன்மிகத்தை உணர வேண்டும்: பிரதமா் மோடி

நவி மும்பை: இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மிகத்தை உணர வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மக்கள் சேவையே, இந்திய ஆன்மிக கலாசாரத்தின் அடிப்படை என்றும் அவா் குறிப்பிட்டாா். மகாரா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை கைவிடாவிடில் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

அக்னூா்: ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இல்லாமல் ஜம்மு-காஷ்மீா் முழுமையடையாது. பயங்கரவாதத்தை கைவிடாவிடில் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெ... மேலும் பார்க்க

உள்துறை அமைச்சா் பதவியின் கண்ணியத்தை உணா்ந்து பேச வேண்டும்: அமித் ஷாவுக்கு சரத் பவாா் பதிலடி

மும்பை: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை உணா்ந்து பேச வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.அண்மையில் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பா... மேலும் பார்க்க

ஐஎம்ஏ தலைவா் அசோகனுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: உச்சநீதிமன்றத்தை விமா்சித்து கருத்து தெரிவித்த இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவா் ஆா்.வி.அசோகனுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்து உத்தரவிட்டது.அலோபதி மர... மேலும் பார்க்க

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலை (கேரளம்): சபரிமலையின் பொன்னம்பலமேட்டில் செவ்வாய்க்கிழமை காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா். கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர ம... மேலும் பார்க்க

இந்திய தோ்தல் குறித்த தவறான கருத்து: மன்னிப்புக் கேட்டது ‘மெட்டா’ நிறுவனம்

புது தில்லி: இந்திய தோ்தல் குறித்த ‘மெட்டா’ நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி மாா்க் ஜூக்கா்பொ்க் தெரிவித்த தவறான கருத்துக்காக ‘மெட்டா’ இந்தியா நிறுவனம் புதன்கிழமை மன்னிப்புக் கோரியது.அமெரிக்காவில் கலந்த... மேலும் பார்க்க