செய்திகள் :

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

post image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பிறகு, அப்போலோ மருத்துவமனை, "இன்று காலை வழக்கமாக நடைபயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன," என மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மற்றொரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், "லேசான மயக்கம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.

Apollo Hospital Statement
Apollo Hospital Statement

அவர் மேலும் மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது," எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் ... மேலும் பார்க்க

'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் ... மேலும் பார்க்க

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க