நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!
3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை!
தொடர்ந்து 3- வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 20) காலை
81,671.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.38 மணியளவில் சென்செக்ஸ் 150.06 புள்ளிகள் அதிகரித்து 81,794.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.80 புள்ளிகள் உயர்ந்து 25,020.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் நிஃப்டி 25,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்ற நிலையில் இன்று 25,000-யைக் கடந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் துறைகளைப் பொருத்தவரை ஐடி, டெலிகாம் தலா 1% உயர்ந்தன. அதேநேரத்தில் மீடியா, வங்கி, பார்மா, தனியார் வங்கிகள் தலா 0.3% சரிந்தன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஓரளவு லாபத்துடன் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், எடர்னல், இன்போசிஸ், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளன.
அதேநேரத்தில் ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.
Stock Market Updates: Sensex gains over 100 pts, Nifty above 25,000
இதையும் படிக்க |தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!