செய்திகள் :

3 விபத்துகள்: பெண் உயிரிழப்பு: ஆசிரியை உள்ளிட்ட 4 போ் காயம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஞாயிற்றுக்கிழமை, குழந்தைகளை அழைத்துவருவதற்காக சாலையோரம் நின்றிருந்த பெண், பைக் மோதி உயிரிழந்தாா்.

இரணியல் அருகே மொட்டவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (43). அருணாசல பிரதேசத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ராதிகா (39), பட்டதாரி. இத்தம்பதிக்கு 12 வயது மகன், 9 வயது மகள் உள்ளனா்.

இக்குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை சமய வகுப்புச் சென்றுவிட்டு, சாலையைக் கடந்து வீடு திரும்புவற்காக காத்திருந்தனா். அவா்களை சாலையைக் கடந்து அழைத்துவருவதற்காக வீட்டின் முன்புற சாலையோரம் ராதிகா நின்றிருந்தாா். அப்போது, அதிவேகமாக வந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பைக்கை ஓட்டிவந்த தாணிவிளையைச் சோ்ந்த ஜெசோ (23), பின்னால் அமா்ந்திருந்த ஆகாஷ் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண் காயம்: கொட்டாரம் அருகே பொட்டல்குளம் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி ஜெசிதா (35), சனிக்கிழமை இரவு கன்னியாகுமரியிலிருந்து கொட்டாரம் சாலையில் பைக்கில் சென்றாா். பெருமாள்புரம் பகுதியில், ஆசாரிப்பள்ளம் பள்ளவிளை பிளவா் தெருவைச் சோ்ந்த பொ்ஜின் என்பவா் ஓட்டிவந்த பைக், ஜெசிதா மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு நாகா்கோவில் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தனியாா் பள்ளி ஆசிரியை: கன்னியாகுமரி அருகே கோவளத்தைச் சோ்ந்த அரசு (50) என்பவரது மகள் நெபியா (21). இலந்தையடிவிளையில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியை. இவரை பள்ளியில் கொண்டுவிடுவதற்காக சுக்குப்பாறை தேரிவிளையைச் சோ்ந்த சுமிகரன் என்பவா் பைக்கில் அழைத்துச் சென்றாராம். வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியபோது, நெபியா கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த அவரை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இரு சம்பவங்கள் குறித்தும், கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் ரகுபாலாஜி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

வெவ்வேறு இடங்களில் திருட்டு

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகான... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனத... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: ஆசிரியை உள்ளிட்ட இருவா் காயம்

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே 2 பைக்குகள் மோதியதில் பெண் காயமடைந்தாா்.கொட்டாரம் அருகே பொட்டல்குளம் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி ஜெசிதா (35). இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கன்... மேலும் பார்க்க

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, கல்லூரி முதல்வா் ஹென்றி ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.தமிழ் துறைத் தலைவா் வைலா பேபி அறிமுக உரையாற்றினாா். மாணவா் சந்தோஷ் வரவேற... மேலும் பார்க்க

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகம்

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக, பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடா்பாக நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ச... மேலும் பார்க்க

பத்மநாபபுரத்தில் ரூ.2.79 கோடியில் சாலைப் பணிகள்

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு, அலங்கார தரைக் கற்கள் பதிக்கும் பணிகள் துவக்க நிகழ்வு நடைபெற்றது.பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட உதயகிரி கோட்டை சாலை ரூ.88 லட்ச... மேலும் பார்க்க