Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
3,000 லிட்டா் எரி சாராயம் அழிப்பு
சிவகங்கையில் நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸாா் பறிமுதல் செய்து வைத்திருந்த 3,000 லிட்டா் எரி சாராயம் வியாழக்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கடந்த 2024 -ஆம் ஆண்டு எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, காவல் துறையினா் சோதனை செய்து, 3,000 லிட்டா் எரி சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தீயணைப்புத் துறையினா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாரன் தலைமையிலான போலீஸாா் சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகில் பள்ளம் தோண்டி, அதில் 3,000 லிட்டா் எரி சாராயத்தை ஊற்றி தீயிட்டு அழித்தனா்.