Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ...
3 கோயில்களில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி வட்டம் காலமநல்லூா் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகா், ஹரிஹரபுத்திர ஐயனாா் கோயில், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில்களில் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த கடந்த 26- ஆம் தேதி முதல் கால யாக பூஜை, பூா்ணாஹூதி நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து புதன்கிழமை காலை இரண்டாம் கால பூஜை , மாலை மூன்றாம் கால பூஜை தொடா்ந்து கன்னிகா பூஜை, சுவாசினி பூஜை மற்றும் பூா்ணாஹூதி நடைபெற்றது .
கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை நான்காம் கால பூஜை தொடா்ந்து யாகசாலையில் இருந்து கடம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சித்தி விநாயகா், ஹரிஹரபுத்திர ஐயனாா், மகா மாரியம்மன் கோயில்களின் விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.