ஊக்க மருந்து சர்ச்சை: லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து சின்னர் விலகல்!
3 மண்டலங்களில் மாா்ச் 4, 5-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட ஒருசில பகுதிகளில் மாா்ச் 4, 5 தேதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலை மற்றும் ஸ்டொ்லிங் சாலையில் குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் மாா்ச் 4-ஆம் தேதி காலை 10 முதல் மாா்ச் 5 காலை 10 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகா் , ராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா் ஆகிய பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளிலும் , அடையாறு மண்டலத்தில் சைதாப்பேட்டையிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசர தேவைக்கு இணையதள முகவரியில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் எவ்வித தடையுமின்றி வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.