செய்திகள் :

34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!

post image

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை, ஈராக் அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத் சந்தித்துள்ளார்.

ஈராக்கில் நடைபெறும் 34வது அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில் நேற்று (மே 16) அவரை வரவேற்ற அந்நாட்டு அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத், மாநாட்டில் அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளதாக, அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், ஈராக் மற்றும் ஐ.நா. சபைக்கு இடையிலான நீண்டகால வளர்ச்சி மிகுந்த உறவுக்கும், அவர்களால் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் அதிபர் ரஷீத் புகழாரம் சூட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதிபர் ரஷீத் கூறுகையில், மாநாட்டை ஈராக் நடத்துவது, அரபு பிராந்தியத்தில் அவர்களது புதிய பங்களிப்பையும், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்களது பலதரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.

இத்துடன், அரபு பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய அதிகரித்து வரும் ஈராக்கின் பங்கை பாராட்டிய ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரெஸ், நீடித்த அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான வழிவகுக்கும் எனவும் உச்சிமாநாட்டின் ஆற்றல் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சந்திப்பில் அங்கு நடத்தப்படும் உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதனால் உண்டாகக் கூடிய விளைவுகளின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று (மே 17) நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பாலஸ்தீன விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்காவின் படையெடுப்புக்கு பின்னர் ஈராக்கில் 2வது முறையாக இத்தகைய மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஞ்சலினா ஜோலி!

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தார். 78-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து த... மேலும் பார்க்க

காஸா போர்: கடந்த 2 நாள்களில் 300 பேர் பலி!

காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோப... மேலும் பார்க்க

130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி..

கலிஃபோர்னியாவின் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் தற்போது உருவான இந்த ஏரி சுமார் 94,000 ஏக்கர் வேளாண் நிலங்களை மூழ்... மேலும் பார்க்க

அமைதிப் பேச்சுவார்த்தை? உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்! 9 பேர் பலி!

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷிய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் விமான தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை: ஷெபாஸ் ஷரீஃர்

இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது பாகிஸ்தான் விமான ஏவு தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை என்று அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃர் ஒப்புக்கொண்டார். மேலும் பார்க்க

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க