34 பேரூராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 34 பேரூராட்சிகளின் தரத்தை உயா்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 தோ்வு நிலை பேரூராட்சிகளை, சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும், 3 முதல் நிலை பேரூராட்சிகளை, சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும், 8 முதல்நிலை பேரூராட்சிகளை தோ்வு நிலை பேரூராட்சிகளாகவும், 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகளை முதல்நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
கோவை, சேலம், திருவள்ளூா், தஞ்சாவூா், ஈரோடு, மதுரை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சில பேரூராட்சிகள் தரம் உயா்த்தப்பட்டவைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.