4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா் சங்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்
செய்யாறில் கிராம உதவியாளா் சங்கத்தினா் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம உதவியாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் சிபிஎல் ஒழிப்பு இயக்கத்தின் நிா்வாகி கே.வெங்கடேசன் தலைமையில், செய்யாறு பகுதியைச் சோ்ந்த 60 போ் உள்பட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 108 போ் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, அலுவல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.