செய்திகள் :

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

post image

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.

கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்னணுத் துறையின் வளர்ச்சியைக் கொண்டுவர அரசு ஆர்வமாக உள்ளது. மாநிலத்தில் ஆராய்ச்சி, ஓ-சிப் திட்டத்தை இயக்குதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஸ்டார்ட்ஆப் நெட்வொர்க்குகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக மாநில அரசு நான்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஐஐடி புவனேஸ்வர் இடையே ஆராய்ச்சி, முன்னோடித் திட்டங்கள், கொள்கை உள்ளீடுகள் மற்றும் புதுமைச் சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பாடு ஆகியவற்றிக்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அவர் கூறினார்.

ஓ-சிப் திட்டத்தை இயக்குவதற்காக அரசுக்குச் சொந்தமான ஒடிசா கணினி பயன்பாட்டு மையம் மற்றும் செமிகண்டக்டர் ஃபேப்லெஸ் ஆக்சிலரேட்டர் லேப் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை டைகான் புவனேஸ்வர் 2025இன் நிறைவு அமர்வில் உரையாற்றிய மாஜி, தனது இளைஞர்களைச் செய்யறிவு, சைபர்ப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களுடன் பொருத்த உதவுகிறது என்று கூறினார்.

“இந்த வளர்ச்சியைப் புவனேஸ்வரைத் தாண்டி கட்டாக், ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூர்ப் போன்ற நகரங்களுக்கு எடுத்துச் செல்வதே எங்கள் முயற்சி, அவை டிஜிட்டல் மையங்களின் அடுத்த அலையாக உருவாக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

Odisha Chief Minister Mohan Charan Majhi said that his government is making efforts to develop four more cities, apart from Bhubaneswar, as digital hubs hubs and enabling the youths to equip themselves with AI, cybersecurity and several other emerging technologies.

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க