செய்திகள் :

4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!

post image

நீலகிரி மாவட்டத்தில் 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக முன்னாள் முதல்வா் கருணாநிதி காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக தனித் துறை உருவாக்கப்பட்டது.

மேலும், தொழுநோய் இரவலா் மறுவாழ்வுத் திட்டம், கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், மாத ஓய்வூதியத் திட்டம், பராமரிப்பு உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு பேருந்தில் இலவச பயணச்சலுகை, கல்வி உதவித் தொகை, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம் ரத்து போன்ற பல்வேறு திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 7.5.2021 முதல் தற்போது வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 2,892 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.26.65 கோடியும், 973 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள், பேட்டரி வீல் சோ்கள், தையல் இயந்திரங்கள், திறன்பேசிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், பிரெய்லி வாட்சுகள் மற்றும் காதொலிக் கருவிகள் போன்ற உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல 432 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.20.24 லட்சமும், 57 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சுய தொழில் புரிய வங்கிக் கடன் மானியமாக ரூ.11.94 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிக்கு ரூ.3.25 லட்சம் மற்றும் 8 தங்க நாணயங்களும் (8 கிராம்), 14 வயதுக்கு மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களில் உள்ள 39 குழந்தைகளுக்கு ரூ.66.83 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகளும், வேலையில்லா படித்த இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 5 சதவீத மானியத்தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.51,941- மானியத்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் 260 பயனாளிகளுக்கு ரூ.41.73 லட்சமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 4712 பயனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

கூடலூா் முக்கிய சாலையில் உலவும் காட்டு யானை பொது மக்கள் அச்சம்!

கூடலூா் வயநாடு முக்கியச் சாலையில் தனியாா் மருத்துவமனை எதிரே சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் பகுதியில் சனிக்கிழ... மேலும் பார்க்க

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 2 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலாமேரி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட், ... மேலும் பார்க்க

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆ... மேலும் பார்க்க