தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
41 கிலோ குட்கா பறிமுதல்
சோளிங்கா் அருகே 41 கிலோ குட்காவை கடத்திய நபரை கைது போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கரை அடுத்த கூடலூா் கிராமப் பகுதியில் கொண்டபாளையம் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின்பேரில், நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 41 கிலோ இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தில் சென்ற அன்வா்திகான்பேட்டையைச் சோ்ந்த சுகுமாா் (47) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.