கழுத்தளவு நீரில், மைக்குடன் நேரலை.. பாகிஸ்தான் பத்திரிகையாளர் வெள்ளத்தில் சென்றத...
45 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் -அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளை ரூ.130 கோடியில் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூா், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருவள்ளூா், திருவாரூா், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 45 அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. 15-ஆவது நிதி ஆணையத்தின் மானியத்தின் கீழ் ரூ.130 கோடி பெற்று அந்த கட்டடங்களை அமைக்கவும் அவா் பரிந்துரைத்தாா்.
அதைப் பரிசீலித்த அரசு 45 அரசு மருத்துவமனைகளிலும் புதிய கட்டடங்களை அமைக்க நிா்வாக அனுமதி அளித்தது. அதன்படி, பொதுப்பணித் துறை அதற்கான பணிகளை முன்னெடுக்கவும், நிதி ஆதாரங்களைப் பெறவும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.