செய்திகள் :

`5 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' -8 மாதங்கள் ஃபிரிட்ஜில் இருந்த பெண்ணின் உடல்... பகீர் பின்னணி

post image

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் இடையே தகராறு ஏற்படும் போது அது வன்முறையில் முடிந்து விடுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் அது போன்று லிவ் இன் முறையில் வாழ்ந்த ஸ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துச்சென்று காட்டுக்குள் வீசினான். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் படிதார். திருமணமான இவர் பிங்கி பிரஜாபதி என்ற பெண்ணுடன் லிவ் இன் முறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்கள் கடந்த 2023ம் அண்டு திரேந்திரா என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்தனர். ஆனால் கடந்த ஆண்டு திடீரென வீட்டை காலி செய்துவிட்டனர்.

பிங்கி மற்றும் கைதான சஞ்சய்

ஆனால், வீட்டில் ஒரு அறையில் சஞ்சய் தனது பொருள்களை போட்டு வைத்திருந்தார். அவற்றை பின்னர் காலி செய்துகொள்வதாக தெரிவித்தார். அந்த அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. அந்த வீட்டை திரேந்திரா திடீரென வேறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார்.

புதிதாக வாடகைக்கு வந்தவர், வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதனை திறந்து காட்டும்படி வீட்டு உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டார். அவரும் அந்த அறையை திறந்து காட்டினார். உள்ளே சஞ்சய் பொருள்கள் இருந்தது. உடனே, அந்த அறைக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு கதவை பூட்டினர். அடுத்த ஓரிரு நாளில் அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதையடுத்து இது குறித்து வாடகைக்கு இருந்தவர் தனது வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தார்.

உள்ளே இருந்த ஃபிரிட்ஜை திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவரின் உடல் இருந்தது. அப்பெண்ணின் கை கழுத்தோடு சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. அவர் தங்க ஆபரணங்கள் அணிந்திருந்தார். உடனே, இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த சஞ்சய் கைது செய்யப்ப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி அமித் சோலங்கி கூறுகையில்,'' இக்கொலை ஜூன் அல்லது ஜூலை மாதம் நடந்திக்கும் என்று நினைக்கிறோம். சம்பவம் நடந்த வீட்டில் சில மாதங்கள் மட்டும் வாடகைக்கு இருந்த சஞ்சய் வீட்டை காலி செய்த பிறகு தனது பொருள்களை அந்த வீட்டில் ஒரு அறையில் வைத்திருந்தார்.

இதனால் அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி வந்து சென்ற போது பிங்கியை கொலை செய்து பிரிட்ஜில் வைத்துவிட்டு சென்றுள்ளார். சஞ்சய் உடலை பிரிட்ஜில் வைத்து ஆன் செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.அதனால் உடல் கெடாமல் இருந்துள்ளது. திடீரென அந்த அறைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் உடல் அழுகி அங்கிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. பிங்கியும் சஞ்சயும் 5 ஆண்டுகளாக லிவ் இன் முறையில் வாழ்ந்துள்ளார். பிங்கி தன்னை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே திருமணமான சஞ்சய் பிங்கியை திருமணம் செய்ய தயங்கி இருக்கிறார். தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்ததால் அவரை கொலை செய்ததாக சஞ்சயிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது''என்றார்.

Saif Ali Khan: அதிகாலையில் கொள்ளை முயற்சி; தடுக்க முயன்ற நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக் குத்து!

மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு பாந்த்ரா பங்களாவில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன... மேலும் பார்க்க

சமாதி ஆனாரா கோபன்சுவாமி? - சந்தேகம் கிளப்பும் ஊர்மக்கள், கல்லறையை திறக்க குடும்பத்தினர் எதிர்ப்பு!

கேரள மாநிலம, திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. மணி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்ட நிலையில் தற்போது 2 மகன்கள் உள்ளனர... மேலும் பார்க்க

சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... வடமாநில இளைஞர் கைது

சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் திடீரென மாண... மேலும் பார்க்க

கார் பார்க்கிங் தகராறு; செக்யூரிட்டி மீது துப்பாக்கிச் சூடு.. போதை ஆசாமி கைது!

டெல்லி மற்றும் நொய்டாவில் அடிக்கடி வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக அல்லது லிப்டில் ஏறுவது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் செக்யூரிட்டி கார்டுகளை தாக்குவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. டெல்லி அருகில் ... மேலும் பார்க்க

`காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு' - போலீஸார் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை

பெற்றோர்கள் பெரும்பாலும் காதலை விரும்புவதில்லை. ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்களது பிள்ளைகள் விரும்பும் நபர்களையே திருமணம் செய்து வைக்கின்றனர். மத்திய பிரதேச மாநில குவாலியர் என்ற இடத்தில் தங்களது விருப்... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி மறைத்த நிர்வாகம்?

புதுச்சேரியில் அத்துமீறல் சம்பவம்சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமி... மேலும் பார்க்க