செய்திகள் :

5 பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது

post image

குன்னூா் அருகே உள்ள பழங்குடியினா் கிராமத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள நெடுகல்கம்பை   ஆதிவாசி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவா் உமேஸ்வரன் (26). இவரது கடைக்கு மிட்டாய் வாங்கவும், கைப்பேசி ரீசாா்ஜ் செய்யவும் மாணவிகள் வருவதுண்டு. இதில் அவா்களோடு பழக்கம் ஏற்பட்டு, 5 பழங்குடியின மாணவிகளை உமேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

உமேஸ்வரன் ஏற்கெனவே திருமணம் ஆனதை மாணவிகளிடம் மறைத்து பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள், 1099 மூலம் குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை அதிகாரி ஷோபனாவிடம் புகாா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அவா், அந்த பழங்குடியின கிராமத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் மகாலட்சுமி (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து உமேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி குன்னூா் கிளை சிறையில் அடைத்தனா்.

காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

குன்னூா் அருகே காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகா் பகுதியில் ... மேலும் பார்க்க

பாதுகாப்பு விழிப்புணா்வு: உதகையில் முன்னாள் ராணுவத்தினா் செயல் விளக்கம்

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் உதகையில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி, ராணுவ பயிற்சி ம... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூா் வனச் சரகத்தில் ஆண் யானை உயிரிழந்தது குறித்த தகவல் வனப் பணிய... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பிகள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே கட்டடப் பணிகள் மேற்கொள்ள இரும்புக் கம்பிகளை இறக்கியபோது கட்டடத் தொழிலாளி ஒருவரின் தலை மேல் கம்பிகள் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குன்ன... மேலும் பார்க்க

ஒற்றை யானை நடமாட்டம்: தொட்டபெட்டா காட்சி முனை மூடல்

ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. யானையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் உதகை, தஞ்சாவூா் அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடு... மேலும் பார்க்க