5 ஆண்டு பயணம்... திருப்புமுனை காட்சிகளுடன் நிறைவடைகிறது பாக்கியலட்சுமி!
விஜய் தொலைக்காட்சியில் 5 ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் நிறைவடைகிறது.
கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், தன்னுடைய உழைப்பினால் எப்படி சுயமாக முன்னேறுகிறாள் என்பதை வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், இல்லத்தரசிகள் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் தொடராகவும் உள்ளது.
இந்த நிலையில், இத்தொடர் ஒரு சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தொலைக்காட்சி நிர்வாகம் விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ளது, இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், தொடரின் கதையானது தொடர்ந்து ஒரே விதத்தில் எடுக்கப்படுவதால் முடிக்கப்படுவது நல்லது என்றும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல திருப்புமுனைக் காட்சிகளுடன் பாக்கியலட்சுமி தொடர் இன்னும் சில வாரங்களில் நிறைவடைகிறது.
இதையும் படிக்க: ஓடிடியில் ரோந்த்!