மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது
கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 49 வயதான ஒருவரை தி ல்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தெற்கு தில்லியில் உள்ள கோவிந்த் பூரியில் வசிக்கும் நீரஜ் ஷா்மா, சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மால் அருகே கைது செய்யப்பட்டாா்.
மது விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் வாகன திருட்டு வழக்கில் சா்மா தப்பியோடியதாக போலீசாா் தெரிவித்தனா். அவா் நீண்ட காலமாக கைது செய்யப்படுவதைத் தவிா்த்த பின்னா் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
‘ஷா்மா தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு தொடா் குற்றவாளி. கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் ஆகியவை அவரது குற்றங்களில் அடங்கும் ‘என்று போலீஸ் அதிகாரி கூறினாா்.
கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய சில வழக்குகளில் சா்மா குற்றவாளி என்று போலீசாா் தெரிவித்தனா். கடந்த காலங்களில் அவா் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், அதனை தவிா்ப்பதற்காக அவா் தன்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்வாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
(